Archu From The Archive, Poems, Tamil

மனோபாவம்

Share Button

Road

 

பேனா பிடிக்கும் விரல்கள்,

கரண்டி பிடிக்கக் கூடாதா?

சலங்கை அணிந்த கால்கள்,

ஹை ஹீல்ஸ் அணியக் கூடாதா?

ஆங்கிலக் கதைகள் எழுதிடின்,

தமிழில் கவிகள் கூடாதா?

இரு பிள்ளைகளுக்குத் தாயானால்,

மீண்டும் குழந்தையாகிவிடக் கூடாதா?

பெண்ணின் பாவாடை நீளத்தில்,

அவள் பண்பை அளக்கிறது மனோபாவம்.

மனதின் வட்டத்திலிருந்து வெளியேறினால்,

உலகின் விசாலம் அறியலாம்!

Share Button

Leave a Reply

Your email address will not be published.